Holy Kural - 060
60. ஊக்கம் உடைமை - Energy
1. உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. To own is to own energy All others own but lethargy. V# 591 2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். Psychic heart is wealth indeed Worldly wealth departs in speed. V# 592 3. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். he strong in will do not complain The loss of worldly wealth and gain. V# 593 4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. Fortune enquires, enters with boom Where tireless strivers have their home. V# 594 5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. Water depth is lotus height Mental strength is men's merit. V# 595 6. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. Let thoughts be always great and grand Though they fail their virtues stand. V# 596 7. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு. Elephants are firm when arrows hit Great minds keep fit ev'n in defeat. V# 597 8. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. Heartless persons cannot boast 'We are liberal to our best'. V# 598 9. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails. V# 599 10. உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்க ளாதலே வேறு. Mental courage is true manhood Lacking that man is like a wood V# 600
Send Your Comments to phdsiva@mccrf.org