W197. எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து. (Whispers from Eternity - Tamil & English)
197. எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.
எங்கள் நெஞ்சிலிருந்து ஒருமித்துப் பொங்கும் எங்கள் பிரார்த்தனை நீரோடைகள் எல்லாம் ஒன்றாக இணைந்து பெருவேகத்துடன் பாய்கிறது. இந்த அகலமான, ஆழமான பிரார்த்தனை நதிகள் அனைத்தும் உன் சன்னிதானமெனும் கடலைத் தேடி அதிவேகமாக ஓடுகின்றன. எங்கள் வெள்ளம், அலட்சியமெனும் தடைகள், மயக்குறு மனிதப் பழக்கவழக்கங்கள், லோகாயத-விகல்பங்கள் என இவையாவற்றையும் தகர்த்துக் கொண்டு பாய்கின்றது. எங்கள் வெள்ளம் சோதனைகளாலும் வாழ்க்கை அனுபவங்களாலுமான பரந்த பிரதேசத்தில், மனித அறியாமையெனும் மணல்களின் வழியாக ஓடிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆயினும், உன் கடற்கரை வெகு தொலைவில் இருப்பதுபோல் தோன்றுகின்றது, தாகத்துடன் கூடிய எங்கள் வெள்ளம் உன் பிரகாசமான பெரும்பரப்பைத் தேடி பரபரப்பாக ஆனால் உறுதியாக சென்று கொண்டுள்ளது.
உன் கருணை மழையை இடைவிடாமல் அடைமழையாய்ப் பொழி. எங்கள் பிரார்த்தனை வெள்ளங்களை பலப்படுத்தி, எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உன் கரைக்கு அவைகளை விரைந்துசெலுத்தி ஜெயமடையச் செய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
197 Mayest Thou reinforce our blended prayers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org