Holy Kural - 019
19. புறங்கூறாமை - Against slander
1. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது Though a man from virtue strays, To keep from slander brings him praise. V# 181 2. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை Who bite behind, and before smile Are worse than open traitors vile. V# 182 3. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் Virtue thinks it better to die, Than live to backbite and to lie. V# 183 4. கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல் Though harsh you speak in one's presence Abuse is worse in his absence. V# 184 5. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் Who turns to slander makes it plain His praise of virtue is in vain. V# 185 6. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும் His failings will be found and shown, Who makes another's failings known. V# 186 7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் By pleasing words who make not friends Sever their hearts by hostile trends. V# 187 8. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு What will they not to strangers do Who bring their friends' defects to view? V# 188 9. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. The world in mercy bears his load Who rants behind words untoward V# 189 10. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு No harm would fall to any man If each his own defect could scan. V# 190
Send Your Comments to phdsiva@mccrf.org