W54. எங்களை உன் குரலைக் கேட்குமாறு ஒன்றிசைக்கச் செய். (Whispers from Eternity - Tamil & English)
54. எங்களை உன் குரலைக் கேட்குமாறு ஒன்றிசைக்கச் செய்.
அன்பு இதயங்களெனும் மைக்ரோபோன்களின் வழியே, சத்குருவான உன் குரலால் எண்ணற்ற ஒலிப்பதிவுகளை உட்பொதித்துள்ளாய். உன் ஞானமொழி மனங்களின் வெளியில் ஆனந்தத்தில் லயித்த இதயங்களைத் தேடி உலவி வருகிறது.
புலனின்ப ஒலிச்சிணுக்குகளினால் (static) செவிடாகிய ஆன்மாக்களால் கேட்க முடியாமல், உன் எச்சரிக்கும் உபதேசங்கள் கேட்பாரில்லாமல் வருத்தத்துடன் கடந்துசெல்கின்றன.
தெய்வ ஒலிபரப்பாளனே, அசட்டையெனும் ஒலிச்சிணுக்குகளுக்கடியில் நசிந்த எங்கள் ஆன்மாக்களை மீட்டு உன்னுடன் ஒன்றிசைக்கச் செய்; உன் ஒலிபரப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு நுண்ணிய தொடுதல்களினால் எங்களை உன்னுடன் ஒன்றிசைக்கச் செய்; அதன்மூலம் நாங்கள் உன் அற்புதமான ஆனந்தப்பரவச விழிப்பு நல்கும் கீதத்தைக் கேட்க எங்களைப் பக்குவப்படுத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
54 Tune us, that we may hear Thy Voice.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org