W181. பேதங்களை என் சமரசத்தின் பக்கத்துணைகொண்டு வெல்ல எனக்குக் கற்பி.(Whispers from Eternity - Tamil & English)
181. பேதங்களை என் சமரசத்தின் பக்கத்துணைகொண்டு வெல்ல எனக்குக் கற்பி.
என்னைச் சுற்றி சோதனை அணுகுண்டுகள் கீச்சிட்டுப் பறந்தாலும் எனக்குக் கவலையில்லை; என் தன்மானத்தினைக் குறிவைக்கும் பீரங்கிக்குண்டுகள் என்னை நோக்கி அடிக்கப்பட்டாலும் நான் அதைக் கண்டுகொள்ள மாட்டேன்; எந்திரத்துப்பாக்கியால் வஞ்சனைக்குறும்பு ரவைகள் என்னை சல்லடைபோட்டு துளைத்தாலும் நான் பொருட்படுத்த மாட்டேன், நீ என்னுடன் இருக்கும்போது உன் கோட்டைமதிலுக்குப் பின்னால் எத்தகைய தாக்குதலினின்றும் நான் காக்கப்படுவேன். மாறாக, நீ என்னுடன் இல்லாதபோது, நான் நவீன விஞ்ஞானத்தின் துணையால் எழுப்பப்பட்ட அதீததிண்மையான கோட்டையில் இருந்தாலும், எனக்கு பாதுகாப்பு உறுதியில்லை. எனக்கு மற்றவர்களின் கோபத்தை உசுப்பி, அவர்களின் அனல்கக்கும் சினத்தை எழுப்பிவிட நாட்டமில்லை; ஆனால், என் ஆன்மாவின் மறைவான குகையில் எனக்கு உறுதியான பாறைபோல் புகலளிக்கும் உனக்கு என் நன்றியை என்றும் உரித்தாக்குவேன்.
என் சூழ்நிலைச் சதையில் கூரியஆணிபோல் துருவிய கலக்கக் காயங்களை நான் குணப்படுத்த எனக்கு அருள்புரி.
ஒளி அரசே, உன் வாகைசூடிய பதவியேற்றத்தின்மூலம் , இருளை அரியணையிலிருந்து நீக்க எனக்குக் கற்றுக்கொடு.
தனிமை ஏக்கத்தால் பீடிக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு, புன்னகை மருந்திட்டு குணப்படுத்த எனக்கு அருள்புரி; காய்ந்து வறண்ட மனங்களுக்கு இதமளிக்கும் பருவமழையாய் பெய்ய எனக்கு அருள்புரி; கலக்கமூட்டும் கள்வனைத் துரத்தியடிக்கும் ரோந்துசுற்றும் ஒளிவிளக்காக நான் ஆக எனக்கு அருள்புரி; சோகத்தினால்-கருகிய இதயங்களுக்கு சாந்தமெனும் அமிர்தமாக ஆக எனக்கு அருள்புரி; இருண்ட வஞ்சனையை அருளொளியால் ஒழிக்க எனக்கு அருள்புரி.
என் சமரசத்தின்மேல் நான் கொண்ட உறுதியான ஆக்டொபஸ் பிடியினால் பேதங்களை வெல்ல எனக்குக் கற்பி. என் நேர்மையின்மூலம் அலட்சியத்தை வெல்ல எனக்குக் கற்பி. பிறரின்மேல் அனாவசியமாக குற்றம்காணும் என் பழக்கத்தை, அதற்கு மாறாக, என்குற்றத்தைக் கண்டு கண்டிப்பதன்மூலம் மாற்ற எனக்கு அருள்புரி.
புலம்பிப் பொருமும் மனங்களுக்கு உன் சாந்தத்தின் அமிர்த-தூக்கமருந்தைக் கொடுத்து, உன் மடியில் உறங்கவைக்க எனக்குக் கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
181 Teach me to Conquer Discord by holding close my own Harmony.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org