Holy Kural - 111
111. புணர்ச்சி மகிழ்தல் - Embrace bliss
1. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஓண்டொடி கண்ணே உள. In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell. V# 1101 2. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. The cure for ailment is somewhere For fair maid's ill she is the cure. V# 1102 3. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. Is lotus-eyed lord's heaven so sweet As sleep in lover's arms so soft? V# 1103 4. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். Away it burns and cools anear Wherefrom did she get this fire? V# 1104 5. வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். The arms of my flower-tressed maid Whatever I wish that that accord. V# 1105 6. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். My simple maid has nectar arms Each embrace brings life-thrilling charms. V# 1106 7. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. Ah the embrace of this fair dame Is like sharing one's food at home. V# 1107 8. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. Joy is the fast embrace that doth Not admit e'en air between both. V# 1108 9. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். Sulking, feeling and clasping fast These three are sweets of lover's tryst. V# 1109 10. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. As knowledge reveals past ignorance So is the belle as love gets close. V# 1110
Send Your Comments to phdsiva@mccrf.org