W139. என் ஆன்ம சாந்தத்தில் உன் கீதத்தை நான் கேட்க விரும்புகின்றேன். (Whispers from Eternity - Tamil & English)
139. என் ஆன்ம சாந்தத்தில் உன் கீதத்தை நான் கேட்க விரும்புகின்றேன்.
உன் சன்னமான குரல், "வீடு திரும்பு", என அழைப்பதை நான் அவ்வப்போது கேட்டுள்ளேன்; ஆனால் அக்குரல் பல ஜென்மங்களில் மேவிய முரட்டுத்தனமான ஆசைகளின் இரைச்சலினால் அமிழ்ந்து போயின. பின்னர், முட்டிமோதும் ஆசைக்கூட்டங்களைத் துறந்தேன். என் மனம் நாடிய தனிமையில், என் பக்தியானது உன் குரலைக் கேட்கப் பேராவலுடன் பொங்குகின்றது. என் மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கும் இந்த பூலோக சத்தங்களின் கனவுகளை அப்புறப்படுத்து: என் ஆன்ம சாந்தத்தில் என்றும் ரீங்காரம் பாடும் உன் அமைதியான குரலை நான் கேட்க விரும்புகின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
139 I want to hear Thy song in the silence of my soul.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org