Holy Kural - 086
86. இகல் - Hatred
1. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். Hatred is a plague that divides And rouses illwill on all sides. V# 851 2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. Rouse not hatred and confusion Though foes provoke disunion V# 852 3. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவவில்லாத் தாவில் விளக்கம் தரும். Shun the plague of enmity And win everlasting glory. V# 853 4. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். Hate-the woe of woes destroy; Then joy of joys you can enjoy. V# 854 5. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர். Who can overcome them in glory That are free from enmity? V# 855 6. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. His fall and ruin are quite near Who holds enmity sweet and dear. V# 856 7. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். They cannot see the supreme Truth Who hate and injure without ruth. V# 857 8. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு. To turn from enmity is gain Fomenting it brings fast ruin. V# 858 9. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. Fortune favours when hate recedes Hatred exceeding ruin breeds. V# 859 10. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. All evils come from enmity All goodness flow from amity. V# 860
Send Your Comments to phdsiva@mccrf.org