W49. உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு. (Whispers from Eternity - Tamil & English)
49. உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.
உன் பிரபஞ்ச இருப்பெனும் வானிலிருந்து வெளிப்படும் உன் மழைத்துளிகளைத் தாகத்துடன் எதிர்நோக்கும் நான், வாழ்க்கையின் ஒரு மேகபட்சி. குரூரமானத் தனிமை மேகங்களைப் பிளந்து, உன் எங்கும் வியாபித்த மழையைப் பொழி.
வற்றி வாடும் என் உதடுகளைத் தீண்டும் உன் ஒவ்வொரு மழைத்துளிக் காட்சிக்காகவும், நான் கவனத்துடன் எதிர்பார்க்கிறேன். நீ வருகை தருகையில், உள்முகமாக உன்னை நான் அருந்தி உட்கொள்வேன்; உன் அனுபவஉணர்வுகளான பாதங்கள், வெளிமுகமாக மழைத்துளியாய் என் நலிந்த உடலின் மேல் சன்னமாகப் பொழியும் போது, அவைகளை நான் வருடி அணைத்துக் கொள்வேன்.
இந்த என் நீண்டகாலத் தாகம் உன் தீண்டலினால் மட்டுமே தணியும். அது, உள்ளே, ஏங்கும் என் ஆன்மாவையும், புறத்தே, விடாமுயற்சியினால் தகிக்கும் என் உடலையும் குளிர்விக்கும். என் அவநம்பிக்கை, சோர்வுச் சூறாவளிகள் கடந்து சென்றுவிட்டன. உன் மழைத்துளிச் சாந்தம் என்னுள்ளே உள்ள ஒவ்வொரு வறண்ட அணுவையும் நனைத்துக் குளிர்விக்கின்றது. இனி நான் உன் திருப்தி கானத்தைப் பாடிக்கொண்டே எல்லாத்திசைகளிலும் சிறகடித்துப் பறந்துசெல்வேன்.
சொர்க்க லோகங்களின் வழியே பொழியும், உன் கனிவான எங்கும்நிறை ஆறுதலெனும் மழைநீரைத் தவிர, வேறெந்த நீரையும் குடிக்கத் தேடிச்செல்லாத இனமான உன் மேகபட்சியாய் என்னை ஆக்கு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
49 Make me the Lark of Life, looking only for Thy Rain.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Post a Comment