W20. கடவுளின் சகல அன்புகளினால் ஆன பூங்கொத்து. (Whispers from Eternity - Tamil & English)
20. கடவுளின் சகல அன்புகளினால் ஆன பூங்கொத்து.
இறைத்தந்தையே, குழந்தைகள் மேல்காட்டும் பரிவு, தாம்பத்தியக் காதல், நட்புறவு, பெற்றோரிடம் காட்டும் பாசம், ஆசிரிய-மாணவ உறவுகளினில் வெளிப்படும் அன்புகளினால் ஆன பலவண்ண பூக்களைக் கொண்ட பூங்கொத்தினை உருவாக்கி, நீ ஆட்சிபுரியும் என் இருதய பீடத்தில் சமர்ப்பிக்க எனக்குக்கற்பி. பூங்கொத்தினை ஒருக்கால் உருவாக்க இயலவில்லையெனில், நான் என் பக்தித் தோட்டத்தில் வளரும் அரிய அன்புமலரைப் பறித்து, உன்முன்னர் நான் அர்ப்பிப்பேன். அதனை நீ ஏற்றுக்கொள்வாயா?
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
20 A bouquet of all loves of God.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org