W187. உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி. (Whispers from Eternity - Tamil & English)
187. உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.
என் கனவுகளினாலான தோட்டத்தைத் தேடி, உன் நாமத்தை ரீங்காரித்து, இடையறாமல் எண்ணிலடங்கா மைல்கள் தூரம் நான் பறந்துசென்றேன்.
நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி; ஆயினும், என் செயலாக்க இறகுகளை எப்போதும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஏனெனில், உயர்ந்தோங்கிய மலையுச்சி நிகர் கனவுகளில் வண்ணமயமாகப் பூத்துக்குலுங்கும் உன் அரிய பூந்தோட்ட மலர்களைத் தேடி நான் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
நான் உன் நாமத்தை ரீங்காரிக்கும் ஒரு ரீங்காரப்பட்சி, அதன் உணர்வெனும் நீண்ட அலகுகளைப் பொன்மய, நீலவண்ண, செந்நிற, மற்றும் பலவண்ண மலர்-குணங்களின் நெஞ்சில் ஆழ்த்தி சுவைக்கின்றது. தீயனவற்றின் கடுக்கும் தேனை சுவைப்பதிலிருந்து என்னை உன் அருள் காக்கட்டும்.
உன் சோர்வடையா அபரிமித சக்தியினால் நான் துறுதுறுவென்று ரீங்காரித்து, உன் புகழ்மகிமையாலான தொங்கும் தோட்டங்களிலும், பணிவான மனித இனிமை மேவும் பாதையோரகளிலும் வளரும் அன்பினால்-தோய்ந்த மலர்களிலிருந்து மதுரத்தை அருந்தும் நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
187 Bless Thy Humming Bird to drink of Thy honey.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org