W130. அனைத்துவகையான மனித அன்பிலும், கடவுளின் அன்பினைக் காண உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
130. அனைத்துவகையான மனித அன்பிலும், கடவுளின் அன்பினைக் காண உரிமையுடன்-வேண்டுதல்.
அனைத்துவகையான அன்பினிற்கும் கடவுளான உன்னை, நான் எல்லா மனித நேசங்களின் அன்பினால் நேசிக்க வந்துள்ளேன். நீயே காக்கும் தந்தை. தனது பெற்றோர்களிடம் மழலையன்பு காட்டும் சிறு குழந்தையும் நீயே. வரம்பற்ற கருணையைப் பொழியும் தாயும் நீயே. ஆருயிர் அன்பர்களுக்கிடையே பாயும் முழுமையான சரணாகத-அன்பின் உயிரோட்டமும் நீயே. நீயே நண்பர்களின் சிநேகித அன்பு. ஒரு சேவகன் தனது எஜமானனிடம் காட்டும் மரியாதையால் என்னைத் தூய்மைப்படுத்து. இம்மையிலும், மறுமையிலும் வற்றாத அன்பின் நீரூற்றான உன்னை, நான் அனைத்துவித தூய அன்பினாலும் நேசிக்க எனக்குக்கற்பி. அனைத்து அன்பினாலும் தெளித்து என்னை நீராட்டு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
130 Demand to see the love of God in all human love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org