Holy Kural - 092
92. வரைவின் மகளிர் - Wanton women
1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். For gold, not love their tongue cajoles Men are ruined by bangled belles. V# 911 2. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். Avoid ill-natured whores who feign Love only for their selfish gain. V# 912 3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று. The false embrace of whores is like That of a damned corpse in the dark. V# 913 4. பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். The wise who seek the wealth of grace Look not for harlots' low embrace. V# 914 5. பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். The lofty wise will never covet The open charms of a vile harlot. V# 915 6. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். Those who guard their worthy fame Shun the wanton's vaunting charm. V# 916 7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். Hollow hearts alone desire The arms of whores with hearts elsewere. V# 917 8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. Senseless fools are lured away By arms of sirens who lead astray. V# 918 9. வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. The soft jewelled arms of whores are hell Into which the degraded fall. V# 919 10. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. Double-minded whores, wine and dice Are lures of those whom fortune flies. V# 920
Send Your Comments to phdsiva@mccrf.org