W206. பூக்களும் வானமும் உன் சேதி சொல்லும் கட்டியக்காரர்கள். (Whispers from Eternity - Tamil & English)
206. பூக்களும் வானமும் உன் சேதி சொல்லும் கட்டியக்காரர்கள்.
பூக்கள், வானம், அழகிய மலர்ச்சோலை போல் வானில் தோன்றும் காட்சி - இவையெல்லாம் தெய்வீகச்செய்தி பகர்பவை.
நான் அவைகளை ஆனந்தமாய் அனுபவித்துத் திளைக்கின்றேன்.
ஆனால் அவரை [கடவுளை] நினைவுபடுத்திய பின்னர், அவ்வழகிய தூதுவர்கள் மறைந்து போகின்றன; ஆயினும், என்னுயிர்க்குயிரான நேசனின் வரம்பில்லா கவின்மிகு அழகு என்னைத் தொடர்ந்து சிலிர்ப்பித்து மகிழ்விக்கின்றது.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
206 Flowers and skies, heralds of Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org