Holy Kural - 132
132. புலவி நுணுக்கம் - Feigned anger
1. பெண்ணியலார் எல்லோரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரந்தநின் மார்பு. I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed. V# 1311 2. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. He sneezed while we went on sulking Expecting me to say 'live long'. V# 1312 3. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. 'For which lady?' she widely cries While I adorn myself with flowers. V# 1313 4. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. 'I love you more than all' I said 'Than whom, than whom?' she sulked and chid. V# 1314 5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். 'In this life we won't part' I told Her eyes at once with tears were filled. V# 1315 6. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். I said 'I thought of you'. She left Her embrace crying 'Oft you forget'. V# 1316 7. வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. I sneezed; she blessed; then changed and wept 'You sneezed now at which lady's thought?' V# 1317 8. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. I repressed sneeze; she wept crying 'Your thoughts from me you are hiding'. V# 1318 9. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. I try to coax her and she remarks 'Your coaxing others thus this marks'. V# 1319 10. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. I think and gaze at her; she chides: 'On whom your thought just now abides?' V# 1320
Send Your Comments to phdsiva@mccrf.org