Holy Kural - 059
59. ஒற்றாடல் - Espionage
1. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். A king should treat these two as eyes The code of laws and careful spies. V# 581 2. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். All that happens, always, to all The king should know in full detail. V# 582 3. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். Conquests are not for the monarch Who cares not for the Spy's remark. V# 583 4. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. His officers, kinsmen and foes Who watch keenly are worthy spies. V# 584 5. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. Fearless gaze, suspectless guise Guarding secrets mark the spies. V# 585 6. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. Guised as monks they gather secrets They betray them not under threats. V# 586 7. மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. A spy draws out other's secrets Beyond a doubt he clears his facts. V# 587 8. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். The reports given by one spy By another spy verify. V# 588 9. ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும். Engage the spies alone, apart When three agree confirm report. V# 589 10. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தா னாகும் மறை Give not the spy open reward It would divulge the secret heard! V# 590
Send Your Comments to phdsiva@mccrf.org