W50. என்னைப் புன்னகை-கோடீஸ்வரனாக ஆக்கு. (Whispers from Eternity - Tamil & English)
50. என்னைப் புன்னகை-கோடீஸ்வரனாக ஆக்கு.
அமைதியான புன்னகையே, என் ஆன்மாவின் வழியே புன்னகை செய். என் ஆன்மா, என் இதயத்தின் வழியே புன்னகை செய்யட்டும். என் இதயம், என் கண்களின் வழியே புன்னகை செய்யட்டும்.
புன்னகையின் இளவலே! என் உருவத் தோற்ற விதானத்திலுள்ள அரியணையில் வந்து அமர். மிருதுவான ஆன்மாவாகிய உன்னை, எந்த ஒரு பொய்ம்மை எதிரியும் அழிக்க நெருங்கமுடியாத வண்ணம், நான் என் வாய்மையெனும் கோட்டையில் பாதுகாப்பேன்.
என்னைப் புன்னகை-கோடீஸ்வரனாக ஆக்கு. அதன்மூலம், உன் புன்னகைப் பொக்கிஷத்தை, உலகிலுள்ள எல்லா சோகம் கவ்விய இதயங்களுக்கும், மாரிபோல் நான் வாரி வழங்குவேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
50 Make me a Smile-Millionaire.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org