Holy Kural - 028
28. கூடாஒழுக்கம் - Imposture
1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். Elements five of feigned life Of a sly hypocrite within laugh. V# 271 2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின் Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows. V# 272 3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. Vaunting sainthood while weak within Seems a grazer with tiger skin. V# 273 4. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike. V# 274 5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். Who false within but freedom feign Shall moan 'What have we done' with pain. V# 275 6. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் Vilest is he who seems a saint Cheating the world without restraint. V# 276 7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து Berry-red is his outward view, Black like its nose his inward hue. V# 277 8. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர். Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes. V# 278 9. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms. V# 279 10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். No balding nor tangling the hair! Abstain from condemned acts with care. V# 280
Send Your Comments to phdsiva@mccrf.org