W140. உன்மேலுள்ள அன்பை எதனாலும் திருடிச் செல்ல முடியாது. (Whispers from Eternity - Tamil & English)
140. உன்மேலுள்ள அன்பை எதனாலும் திருடிச் செல்ல முடியாது.
சத்தமாகவோ அல்லது முணுமுணுத்தோ சொல்லும் பிரார்த்தனை வார்த்தைகள் உன்மேலுள்ள அன்பை திருடிச் செல்லாமல் இருக்கட்டும். ஆன்மாவின் பேச்சற்ற மொழியினால், நான் உன் அவசியத்தை உணர்த்துவேன். உன் மொழி மௌனம், அம்மொழியினால் என் அமைதியின் வாயிலாக, நீ என்னிடம் பேச வேண்டும்; நீ எப்போதும் என்னை நேசித்துக்கொண்டே இருந்திருக்கின்றாய், ஆனால் நான்தான் அதனை அறியாமல் இருந்திருக்கின்றேன் என்ற உண்மையை எனக்கு உரைக்க வேண்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
140 Nothing can steal my love for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org