Holy Kural - 034
34. நிலையாமை - Instability
1. நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. The worst of follies it is told The fleeting as lasting to hold. V# 331 2. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes. V# 332 3. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். Wealth wanes away; but when it comes Take care to do enduring things. V# 333 4. நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் The showy day is but a saw Your life, know that, to file and gnaw. V# 334 5. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes. V# 335 6. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. One was yesterday; not today! The wonder of the world's way! V# 336 7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. Man knows not his next moment On crores of things he is intent. V# 337 8. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு. The soul from body any day Like bird from egg-shell flies away. V# 338 9. உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. Death is like a slumber deep And birth like waking from that sleep. V# 339 10. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு The life berthed in this body shows A fixed home it never knows. V# 340
Send Your Comments to phdsiva@mccrf.org