W76. மற்றவர்களின் காயத்தினில் மொய்க்கும் வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
76. மற்றவர்களின் காயத்தினில் மொய்க்கும் வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி.
அமைதித் தேனீ என் இதயச் சோலைக்கு வழிநாடி வந்து சேர்ந்துள்ளது, அங்கே சரசரக்கும் எண்ண மரங்கள் தங்கள் மெல்லிய கிளைக் கைகளினால், விவேகமுடைய அல்லிமலர்கள், வேண்டிப் பிரார்த்திக்கும் குவளைமலர்கள், ஆன்மக் கதிர்வீசும் சாமந்திப்பூக்கள், அன்பினை அர்ப்பிக்கும் ஊதாப்பூக்கள் போன்றவைகளால் ஆன சுகந்தமான பூங்கொத்தினை நீட்டுகின்றன.
அங்கு, பல மலர்களினாலான என் இதயத் தோட்டத்திற்குள், என் அன்பின் இனிமையான மணம்வீசும் தென்றலினால் வருடப்பட்டு, பூக்கும் நற்குணங்கள் தங்கள் அகத்தே உன் இனிமையின் ஈரத்தைக் கொண்டுள்ள அவ்விடத்திலே, என் துறுதுறுப்பான மனத்தேனீ உன் தேனினிமைப் பொக்கிஷத்தில் தாவிக் குதித்துத் தடுமாறித் திளைக்கின்றது.
மற்றவர்களின் காயத்தினில் விரும்பி மொய்க்கும், மொய்த்து அவர்களின் வலியை அதிகமாக்கும், வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி.
மற்றவர்களின் இதயக்கூட்டிலிருந்து சொட்டும் நற்குணத் தேனைக் கவரும் உன் உற்சாகத்துடிப்புள்ள தேனீயாக நான் ஆவேனாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
76 Teach me to abhor flies of sarcasm, which sit on the wounds of others.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org