MCCRF - A global volunteer network

Holy Kural - 107

107. இரவச்சம் - Dread of beggary




1. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். Not to beg is billions worth E'en from eye-like friends who give with mirth. V# 1061 2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். Let World-Maker loiter and rot If 'beg and live' be human fate. V# 1062 3. இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல். Nothing is hard like hard saying 'We end poverty by begging'. V# 1063 4. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. All space is small before the great Who beg not e'en in want acute. V# 1064 5. தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி னூங்கினியது இல். Though gruel thin, nothing is sweet Like the food earned by labour's sweat. V# 1065 6. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். It may be water for the cow Begging tongue is mean anyhow. V# 1066 7. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. If beg they must I beg beggers Not to beg from shrinking misers. V# 1067 8. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். The hapless bark of beggary splits On the rock of refusing hits. V# 1068 9. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். The heart at thought of beggars melts; It dies at repulsing insults. V# 1069 10. கரப்பவர்க்கு யாஙகொளிக்குங் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். The word 'No' kills the begger's life Where can the niggard's life be safe? V# 1070

 

Powered by Blogger.