Holy Kural - 036
36. மெய்யுணர்தல் - Truth consciousness
1. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. That error entails ignoble birth Which deems vain things as things of worth. V# 351 2. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு Men of spotless pure insight Enjoy delight devoid of night. V# 352 3. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து To doubtless minds whose heart is clear More than earth heaven is near. V# 353 4. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. Knowledge of five senses is vain Without knowing the Truth within. V# 354 5. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. Knowledge is Truth of things to find In every case of every kind. V# 355 6. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி Who learn and here the Truth discern Enter the path of non-return. V# 356 7. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth. V# 357 8. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. It is knowledge to know Self-Truth And remove the folly of birth. V# 358 9. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். Know the Refuge; off with bondage Be free from ills of thralldom, O sage. V# 359 10. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் Woes expire when lust, wrath, folly Expire even to name, fully. V# 360
Send Your Comments to phdsiva@mccrf.org