Holy Kural - 051
51. தெரிந்து தெளிதல் - Testing of men for confidence
1. அறம்பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் Pleasure, gold, fear of life Virtue- Test by these four and trust the true. V# 501 2. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு Spotless name of noble birth Shamed of stain-that choice is worth. V# 502 3. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance. V# 503 4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் Good and evil in man weigh well Judge him by virtues which prevail. V# 504 5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் By the touchstone of deeds is seen If any one is great or mean. V# 505 6. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி Choose not those men without kinsmen Without affine or shame of sin. V# 506 7. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும் On favour leaning fools you choose; Folly in all its forms ensues. V# 507 8. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் To trust an untried stranger brings Endless troubles on all our kins. V# 508 9. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் Trust not without testing and then Find proper work for trusted men. V# 509 10. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். Trust without test; The trusted doubt; Both entail troubles in and out. V# 510
Send Your Comments to phdsiva@mccrf.org