MCCRF - A global volunteer network

Holy Kural - 078

78. படைச்செருக்கு - Military pride




1. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின் றவர். Stand not before my chief, O foes! Many who stood, in stones repose. V# 771 2. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. To lift a lance that missed a tusker Is prouder than shaft that hit a hare. V# 772 3. பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. Valour is fight with fierce courage Mercy to the fallen is its edge. V# 773 4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். At the tusker he flings his lance One in body smiles another chance. V# 774 5. விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. When lances dart if heroes wink 'It is a rout' the world will think. V# 775 6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. The brave shall deem the days as vain Which did not battle-wounds sustain. V# 776 7. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. Their anklets aloud jingle their name Who sacrifice their life for fame. V# 777 8. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர். The king may chide, they pursue strife; They fear loss of glory; not life. V# 778 9. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். Who will blame the heroes that lose Their lives in war to keep their vows? V# 779 10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. Such a death shall be prayed for Which draws the tears of the ruler. V# 780

 

Powered by Blogger.