10. விபூதி யோகம் - பகவத்கீதை - The Eternal Way
பகவத்கீதை (தமிழில் உட்பொருள் உரைச் சுருக்கம்)
Tamil Re-Phrasing, Reflections and Remarks
by V.R. Ganesh Chandar (V.R. கணேஷ் சந்தர்)
Note: By clicking the sloka (verse) numbers within each chapter, you can navigate to the corresponding English commentary of Sri Aurobindo with original Sanskrit text, meaning, and audio (Courtesy of http://bhagavadgita.org.in/).
பகவத் கீதை பத்தாம் அத்தியாயம்
10. விபூதி யோகம்
(திவ்ய வெளிப்பாடுகள் யோகம்)
உன்னதப் பேருணர்வின் கூடுதல் தகவல்களும், அதன் பல்வேறு வகைகளும், வெளிப்படுத்தல்களும், தியான ஒன்றிப்பில் தொடர்ந்து நிலைத்திருக்கும் ஆன்மாவிற்கு உள்ளிருந்து விளங்குகின்றது.
[ராய் ஆகிய] நான், ஸ்லோகங்களின் உட்பொருளாகக் கூறப்பட்டுள்ளதில், சமஸ்க்ருத மூல ஸ்லோகத்துடன் ஒப்பிடுகையில், அவைகளில் உள்ள பெயர்களின் மற்றும் கருத்துக்களின் பொருளும் உள்ளர்த்தமும் நன்கு புரிந்து கொள்ள, கருத்துரையாக செய்துள்ளேன். வாசகருக்கு சம்ஸ்க்ருத வார்த்தைகளில் உள்ள ஸ்லோகங்கள் புரிந்துகொள்ள கஷ்டமாயிருந்தால், நான் கொடுத்துள்ள உட்பொருளைப் பின்பற்றுவார்களாக.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:
10.1. என் உன்னதமான மொழியை மறுபடியும் கேள். கேட்பதில் உள்ளம் மகிழும் உனக்கு நான் சொல்லுகிறேன்.
உட்பொருள்:
உயர்ந்த உண்மையின் உள்ளார்ந்த வெளிப்படுத்தலை அறிய கவனமுடன் இரு. இவ்வெளிப்படுத்தல்களை அறிவதில் மகிழ்ச்சியுறும் உனக்கு, சாராம்சமான உன் உள்ளார்ந்த உண்மையான ஆன்மாவிலிருந்து மேலும் பல வெளிப்படுத்தப்படும்.
10.2 பலவாய் இருக்கும் தேவதேவதைகளோ, ஞானதிருஷ்டியாளர்களோ, ஞானிகளோ, என் மூலத்தை அறிவதில்லை. ஏனெனில், நானே அவர்களின் மூலமாய் இருப்பதால்.
உட்பொருள்:
தற்காலிக தெய்வீக அந்தஸ்த்தினை அடைந்தவர்களோ, முழு அனுபூதி இன்னும் பெறாத உயருணர்வாளர்களோ, இறைச்சிகரத்தின் மூலத்தை அறியவில்லை. ஏனென்றால் அதுவே அவர்களின் மூலம்.
உரை:
இந்த வர்ணனையில், முழு அனுபூதியை நெருங்கிய ஆன்மாக்கள், பூமியில் வாழ்பவர்களோ புலனாகா மண்டலங்களில் வாழ்பவர்களோ, அவர்கள் தேவதேவதைகள் அதாவது பிரகாசமுடையவர்கள் எனக் கூறப்படுகின்றனர். ஞானிகள் விவேக அறிவு பெற்றவர்கள். ஒளியூட்டம் முற்றுப்பெறாதவரை பேருணர்வின் முழு அறிவு சாத்தியமல்ல. அறியாமைத் திரையை துளைக்கும் வரை சாதகன் தியான மனமொருமிப்பில் ஈடுபடவேண்டும். இவ்விவரம் யோக சூத்ரா 3.1 முதல் 3.6 வரை கூறப்பட்டுள்ளது.
• மனமொருமித்தல் என்பது நினைவின் சிதிலமுறாத ஓட்டம்
• அலைபாயாத உள்முக மனமொருமித்தலே தியானம்
• மனமொருமிப்பால் எப்போது இலக்குப் பொருள் மேலூடுவப்படுகிறதோ, அப்போது அதன் உண்மை அறியப்பட்டதாகிறது. இது சமாதி.
• மனமொருமிப்பு, தியானம், சமாதி - இம்மூன்றின் ஒன்றுசேர்ந்த இயக்கம் முழுமையான நிதித்தியாசனம்.
• முழுமையான நிதித்தியாசனத்தின் விளைவாக ஒருவனின் விழிப்புணர்வில் ஞான ஒளி உதயமாகிறது.
• மேம்பட்ட உணர்வு அனுபவமாக முழுமையான நிதித்தியாசனப் பயிற்சியினைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
10.3. பிறவாதவனாக, தொடக்கமற்றவனாக, படைப்பு மண்டலங்களின் ராஜ்யாதிபதியாக என்னை அறிந்தவன், நிலையற்றவர்களிடையே மயக்குறாதவன், துயரங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவன்.
உட்பொருள்:
இறைமையை சுய இருப்பாக, தொடக்கமற்றதாக, பிரபஞ்ச காரியங்களை முடுக்கிவிடுவதான நுண்ணறிவு விசையாக, அறிந்த சாதகனே தேகக்கட்டுடைய ஆத்மாக்களிடையே அறியாமையிலிருந்து முந்தைய பந்தபாசச் செயல்களிலிருந்து, துயரநிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டவனாவான்.
10.4. புரிதல், அறிவு, மயக்கத்திலிருந்து விடுதலை, பொறுமை, உண்மை, சுய கட்டுப்பாடு, அமைதி, இன்பம், வலி, பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை;
10.5. துன்புறாமை, பேதம் காட்டாமை, திருப்தி, தவம், வள்ளல்தன்மை, புகழ், அவமானம், எனும் இவ்வனுபங்களை வைத்திருக்கும் பலவாறாக உள்ள ஜீவன்கள் என்னிலிருந்து, அதாவது, இறைப் பேருணர்விலிருந்து மட்டுமே உதிக்கின்றன.
உட்பொருள்:
வாழ்வு நாடகம், சர்வ வியாபகமாகவும், வெளிப்பாட்டின் பல அடுக்குகளில் தோன்றும் ஆணைக்கடங்கி ஏற்றவாறு காட்டிக்கொள்வதுமான பேருணர்வில்தான் நடக்கிறது. பேருணர்வு மட்டும்தான் இருப்பதால் அதற்குப் புறவயமாக எதுவமே நடக்காது.
10.6. ஆதியில் உதித்த அந்த ஏழு ரிஷிகள், மனித குல மூதாதையர்களான நால்வர் என்னிலிருந்து வெளிப்பட்டவர்கள், பிரபஞ்சத்திலுள்ள மற்ற எல்லா பிரஜைகள் என இவர்களைனைவரும் என் மனதிலிருந்து வெளிப்பட்டு என்னில் உதித்தவர்கள்.
உட்பொருள்:
பிரபஞ்ச வளர்போக்கினை நடத்தும் இறைமையின் ஏழு அம்சங்கள், ஓம் ஸ்வரத்தின் நான்கு அம்சங்கள் – அதாவது, ஓம் ஸ்வரத்தின் வியாபிக்கும் அதிர்வுவிசை, விண்வெளி வஸ்துக்கள், தேசம் மற்றும் காலம் ஆகியன – இறைமையில் தோன்றியுள்ளன. எல்லா உடலெடுத்த படைப்புக்களும் இறைமையின் பிரபஞ்ச வியக்தமான விராட்ரூபத்தினின்று உதித்தவை.
உரை:
இந்நேரம், வாசகர்கள், கீதாச்சார்யனின் உள்ளக்கிடக்கையை அறியவந்திருப்பார்கள். அவர் சில முக்கிய கருத்துக்களை பலகோணங்களில் விளக்கி, உள்ளார்ந்த பரிசீலனைக்காக எடுத்துரைக்கின்றார். அவர் பொழுதுபோக்குக்காக ஒரு சுவாரஸ்யமான கதையை சொல்லவில்லை. எதை அவர் முன்வைக்கிறார் என்றால்:
• தத்துவக் கோட்பாடுகளின் பொது நோக்கு
• வாழ்பாணியின் தேர்ந்தெடுப்புக்கு ஒரு சிபாரிசு
• ஆன்மாவை விடுவிப்பதான ஆன்மீகப்பயிற்சி
ஆகியனவாகும்.
10.7. என் இருப்பின், என் ஆற்றலின் மற்றும் அதன் வெளிப்பாடுகளின் உண்மைகளை அறிந்தவன், ஐயமின்றி என்னில் ஐக்கியமானவன்.
உட்பொருள்:
இறைமையின் சுயபிரகடன ஆற்றல் மற்றும் அதன் வெளிப்பாடுகள் பற்றிய உண்மை அறிந்த சாதகன், உண்மையில் இறையனுபூதியில் நிலைத்தவன்.
உரை:
முழு அனுபூதி பெற்றவர் என்பவர் பேருணர்வின் உண்மைகளையும், அதன் செயல்பாடுகளையும் உண்மையில் அறிந்து, முழுமையான ஒருமைச் சமாதியில் நிலைபெற்றவர். தியானநிலையில் இருந்தாலும், சகஜ நிலையில் இருந்தாலும், அவர் சமாதிநிலையில் தொடர்வதில் மாற்றம் இருப்பதில்லை.
10.8. அனைத்தின் மூலம் நான். எல்லா படைப்புக்களும் என்னிடமிருந்து வெளியாகின்றன. இதனை அறியும் ஞான சாதகர்கள், பக்தி தோய்ந்த அர்ப்பணபுத்தியுடன் என்னையே தியானிக்கிறார்கள்.
உட்பொருள்:
இறைமையானது ஜீவராசிகள் மற்றும் பொருட்களின் மூலம். பிரபஞ்சம் இறைமையிடமிருந்து தோன்றுகிறது. இதனை அறியும் ஞான சாதகர்கள், பக்தி அர்ப்பணபுத்தியுடனும் நினைவோட்டத்தை இறைமையிடம் வைத்து தியானித்தும் கௌரவத்துடன் இறையுண்மையை அங்கீகரிக்கிறான்.
உரை:
பிசிறற்ற மன ஒருமைக்காக தியானம் பரிந்துரைக்கப்பட்டாலும் நித்யத்துடனான நம் உறவை எப்பொழுதும் நினைவு படுத்திக் கொள்ள நாம் நம்மைப் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும். நாம் நம் ஆன்மீக மெய்த்தன்மையை மறத்தலே கஷ்டங்களுக்கும் மகிழ்ச்சியின்மைக்கும் முதற்காரணம்.
10.9. என்னை நினைவிலே கொண்டு என்னைச் சரணடைபவர்கள், அவர்களில் ஒருவருக்கொருவர் என்னைப்பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, ஒளியூட்டம் வழங்கியும், பெற்றும் ஆத்மதிருப்தி பெற்றவராகின்றனர்.
உட்பொருள்:
எண்ணம் முழுவதும் இறைமை நிறைந்தவராய் வாழ்தலில் சரணாகதபூதராய், உண்மை வார்த்தையும் தைரியமும் பிறருக்கு மொழிபவராகி இருப்பவர்கள் ஆன்மதிருப்தராய் இருக்கின்றனர்.
உரை:
இறை நினைப்போ, இறைச் சரணாகத மனப்பாங்கோ, பிறருடனான உறவில் ஆக்கபூர்வமாய் வைத்துக் கொள்வதோ உடனே ஆன்மீக முழுமையைத் தந்துவிடும் எனக் கொள்ளக்கூடாது - ஆயினும், இவையாவும் நன்மை தரும் நடத்தைகள், அவைகளை வளர்த்துக்கொள்வது அவசியம். நாம் ஆன்மதிருப்தராயிருந்தால் நாம் இயல்பாகவே இவ்வாறுதான் நடந்து கொள்வோம்.
10.10. பற்றுறுதியாய் அன்புடன் என்னை வழிபடுவோருக்கு நான் புத்தி யோகத்தை அளிக்கின்றேன். அதனால் அவர்கள் என்னிடம் வந்தடைகிறார்கள்.
உட்பொருள்:
ஸ்திரமான தார்மீக வாழ்வில் ஆன்மீகப் பயிற்சி மேற்கொண்டு முழுமனத்துடன் இறைவனிடம் பக்தி செலுத்தும் சாதகனுக்கு, இறைக்கருணை, விவேகித்த விசாரணைக்கான திறனை வழங்கி அதனால் அவர்கள் உள்காட்சியும் இறையனுபூதியும் வழங்கப் பெறுகிறார்கள்.
உரை:
ஆன்மீகத் திறவாதலும் விவேகித்த விசாரணைத் திறன்கள் மேம்படுவதும், வேகமாகவோ மேன்மையை நோக்கி மெதுவாகவோ நடைபெறலாம். வேகமானதாயிருந்தால் நம் பாக்கியமெனவும் அந்த ஆசிகளுக்காக நாம் நன்றி செலுத்துவோராகவும் ஆகலாம். மேன்மையை நோக்கி மெதுவாக வரும் திறனென்றாலும் நாம் நன்றியுடையவர்களாகத்தான் இருக்க வேண்டும். தவிர்க்கவேண்டியது என்னவெனில், துயரத்திற்கும் ஏமாற்றத்திற்கும் காரணமான தன்னைத்தான் நொந்து கொள்ளுதலையே. பக்திக் கனலில் பற்றுறுதியை தளரவிடாமல் வளர்ப்பதே நாம் செய்யவேண்டிய வழி. நாம் ஆன்மீக முழுமையை அடைவது நிச்சயம்.
10.11. ஆன்மப் பயிற்சி செய்யும் சாதகர்களிடம் நான் அவர்களின் மேல் உள்ள அருட்கருணையினால் அவர்களின் ஆத்மாவாக இருந்துகொண்டு அவர்களின் அறியாமை இருளை ஞான ஒளியால் நீக்குகிறேன்.
உட்பொருள்:
இறைமையானது உள்ளவாறு இருந்துகொண்டிருப்பினும், சாதகனின் பக்தியால் அந்த இறைமையின் அருளே, அறியாமை இருளை நேரடி அறிவு எனும் பிரகாச ஒளியால் நீக்குகிறது,
உரை:
உள்ளிருந்து சுரக்கும் அறிவின் உதயத்தால், ஆன்ம விழிப்பின் எல்லாத் தடைகளும் நீங்குகின்றன. முனைவுடனான தார்மீக வாழ்க்கையும் தியான மனவொருமையும் ஆன்ம ஞானத்திற்கான உடல் மற்றும் மனத் தடைகளை நீக்கினாலும், ஆணவகெட்டியுடனான ஆத்மா தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முடியாது, ஆன்ம விழிப்பின் கடைசித் திரை விலகல் இறைக்கருணையால்தான் சாத்தியம். ஆணவத்தின் பிடிப்பு அருகி மிகச்சிறிதளவு மீதி நிற்கும்போது, இறைமை மீதான பூரண ஆன்ம சரணாகதியே ஒருமையுணர்வுக்கு வழிவகுக்கும்.
அர்ஜுனன் கூறியது:
10.12. நீ தான் உன்னதப் பேருண்மை. உன்னதப் புகலிடம். உன்னத சௌசகாரகன் (தூய்மையாக்கி). நித்ய திவ்ய ஆன்மா. மூல இறைமை. பிறவாதவன் மற்றும் சர்வ வியாபகன்.
10.13. தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் இதனை இவ்வாறுதான் பிரகடனப்படுத்துகிறார்கள். இப்போது நீயும் அவ்வாறே கூறுகிறாய்.
10.14. நீ கூறுவதையெல்லாம் உண்மை எனவே நான் ஏற்கிறேன். உண்மையில், தேவதேவதைகளோ ஒளியூட்டம் முழுதும்பெறாத ஆன்மாக்களோ உன் வெளிப்பாடுகளை அறியவில்லை.
10.15. உன்னதமான ஒருமையே, உன்னை அறிய உன்னால்தான் முடியும். அனைத்தையும் தோற்றுவித்து ஆள்பவனே, தேவதேவதைகளின் தெய்வமே, பிரபஞ்ச நாயகனே,
10.16. சுய வெளிப்பாட்டால் நீ எவ்வாறு உலகத்தில் பரவி அதனுள்ளும் வசிக்கிறாய் என விவரமாகக் கூறு.
10.17. நிலைத்த தியானத்தினால் எவ்வாறு உன்னை அறிவது ? உன் இருப்பின் என்னென்ன வகைகளை நான் தியானிப்பது?
10.18. உன் வல்லமைகளையும் உன் வெளிப்பாடுகளையும் மேலும் விவரமாக எனக்குக் கூறு. தேனான உன் வார்த்தைகளை எவ்வளவு கேட்பினும் எனக்கு முழு திருப்தி உண்டாகாது.
உரை:
பூர்வாங்கமாகப் பெற்ற மனத் தெளிவால், ஆன்மா சுதாரித்து மகிழ்ந்து, புதிதாக்கப்பட்ட விருப்பார்வத்துடன் பேருண்மையின் இருப்பையும் எவ்வாறு அதனை புரிந்து கொள்வது என்பதையும் கண்டுகொள்ள தியானத்தில் மனமொருமிக்கிறது. பேரார்வம் கொண்ட ஆத்மாவின் நடத்தை இவ்வர்ணனைகளின் முன் அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டவைகளிலிருந்து பெரிதும் மாற்றம் அடைந்துள்ளவாறு இங்கு முன் வைக்கப்படுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதில் கூறியது.
10.19. கவனமாய்க் கேள். என் சுய வெளிப்பாட்டின் மிக விசேஷமானவைகளை மட்டும் விவரிக்கிறேன். ஏனென்றால், அவைகளின் விரிவு முடிவற்றன.
உட்பொருள்:
கவனத்துடன் இரு. வெளிப்பாடுகள் பலப் பலவாய் இருந்தாலும் அவைகளில் தெள்ளிய சுய வெளிப்பாடுகள் உன் உள்ளத்திலிருந்து காட்டிக் கொடுக்கப்பட்டு திறவாகப் போகிறது.
உரை:
“கவனி” எனும் கட்டளை, உண்மை மீதான சுதாரிப்பு, பார்த்தல், ஏற்பு மனோபா:வம் ஆகியவற்றை அர்த்தப்படுத்துகிறது. தியான ஒருமை என்பது கீழ் சொல்லப்பட்டுள்ள லட்சணங்களுடன் உணர்ந்து செய்யப் படவேண்டிய ஒன்று.
• தெளிவான அறிநிலை
• மன மற்றும் உணர்ச்சித் ததும்பல் இல்லாமை
• ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் ஆதிக்கத்தில் இல்லாமை.
ஆன்மா இப்போது இறையிருப்பின் உண்மையைப் பகுதியளவு அறியச் சித்தமாகிறது.
10.20. எல்லா படைப்புகளின் இதயத்தில் உறையும் உண்மை இருப்பாகிய பேரான்மா நானே. படைப்புகளின் தொடக்கம், நடு, முடிவு நானே.
உட்பொருள்:
எல்லா ஆன்மாக்களின் இருப்புண்மை இறைமையே. காலம் உட்பட அனைத்துமே இறைமைக்குட்படுவதால், இறையிருப்பின் உண்மையானது, எல்லா நிகழ்வுகளிலும் நிரூபணமாகிறது.
உரை:
தியானம் செய்யும் சாதகனின் அறிநிலை வெளியில் பிரபஞ்சத் தோற்றங்கள் திறவாகின்றன. ஆன்மாக்களின் சாரமாக, பிரபஞ்சத்தை உள் வஸ்துவாக வைத்திருக்கும் பேரூழிக் காலத்தின் வெளி மற்றும் எல்லா ஆன்மாக்களை உட்படுத்திய சர்வ வியாபக பேருண்மையாக இறையான்மா பார்க்கப்படுகிறது.
10.21. பெருந்தெய்வங்கள் மூவரில் நான் காக்கும் தெய்வமாகிய விஷ்ணு. பிரகாசிப்பவைகளில் நான் சூரியன். பூமிக்கு நீரைத் தரும் புயல் நான் (மூலத்தில் வேறு வரிகள் உள்ளன). இரவு வானில் நான்தான் நிலவு.
உட்பொருள்:
இயற்கையின் கட்டுப்படுத்தும் அம்சங்களில் இறைமைதான் ஸ்திரகர்த்தா (நிலைப்படுத்துபவன்). இறைமைதான் சூரியன்; அதுதான் பூமிக்கு மழையை இறக்குவதான காற்றின் அசைக்கும் விசை; அதுதான் சூரியனிடமிருந்து ஒளியைப் பிரதிபலிப்பில் வாங்கும் சந்திரன்.
உரை:
ஆன்ம விழிப்புணர்வு விரிவடைகையில் ஆனால் அதே சமயம் எண்ணங்களும் மனக் கற்பிதங்களும் திகழ்ந்து கொண்டே இருக்கையில், தியானம் செய்யும் சாதகன் சர்வ வியாபகப் பேருணர்வின் தோற்றக் காட்சிகளை தத்துவார்த்தமாகவும் இயற்கை நிகழ்வுகளாகவும் அடையாளப்படுத்துகிறான். பேருணர்வுதான் ஒற்றை இருப்புண்மை என்பதால், எல்லா வெளிப்பாடுகளும் அதன் காட்டிக் கொள்ளுதலே ஆகும். பேருணர்வை மனக் கற்பிதங்களாகவும் இயற்கையின் அம்சங்களாகவும் அடையாளப்படுத்துவது வரும் ஸ்லோகங்களிலும் தொடரும்.
10.22. வேதங்களில் நான் சாம வேதம். தேவர்களில் நான் இந்திரன். புலன்களில் நான் மனம். ஜீவராசிகளின் நுண்ணறிவு நான்.
உட்பொருள்:
திறவான வெளிப்பாடுகளில் உன்னதப் பேருண்மை தன்னை சமத்துவ மௌனமாகக் காட்டிக் கொள்கிறது. வழிக்குட்படுத்தும் சாதனயுக்திகளில் ஆன்மாவின் வியக்த அறிநிலைப் பரப்பின் ஏற்ற இறக்கங்களைச் சீர்ப்படுத்தும் பேருணர்வாகக் காட்டிக் கொள்கிறது. புலன் காட்சிகளில் பேருணர்வு மனமாகக் காட்டிக் கொள்கிறது. உடல் பெற்ற ஆன்மாக்களிடம் பேருணர்வுதான் நுண்ணறிவால் பகுத்தறியும் விவேகமாகக் காட்டிக் கொள்கிறது.
10.23. ருத்ரர்களில் நான் சங்கரன். பலவாக உள்ள ஜீவராசிகளில் நான் செல்வ தேவதை. பூதங்களில் நான் நெருப்பு. மலைகளில் நான் மேரு.
உட்பொருள்:
பிரபை வெளியிடும் விசைகளில் பேருணர்வு தன்னை உன்னதமானதாகக் காட்டிக் கொள்கிறது. (செல்வ வளங்களில்) பேருணர்வு தன்னை வரம்பற்றதாகக் காட்டிக் கொள்கிறது. உயிரூட்டும் சக்திகளில் பேருணர்வு தூய்மைப்படுத்துவதாகக் காட்டிக் கொள்கிறது. எல்லா கற்பித நிகழ்வுகளிலும் அதுதான் வல்லரசன்.
10.24. அறிவு தருபவர்களில் (மகரிஷிகளில்) நான் முதலாமவனான ப்ருஹஸ்பதி. சேனாதிபதிகளில் நான் கந்தன், நீர்நிலைகளில் நான் சமுத்திரம்.
உட்பொருள்:
அறிவின் ஆதாரங்களில் உன்னதப் பேருண்மைதான் முதலாவதாக இருந்து நடத்திச் செல்வது. நம் ஈடுபாடுகளில் வெற்றியைத் தருவது அந்த இறைமைதான். அறிநிலைப் பரப்பில் இறைமைதான் வரம்பற்ற சர்வ வியாபி.
10.25. தீர்க்கதரிசிகளில் நான் பிருகு மகரிஷி. ஒலிகளில் நான் ஒற்றை அசைச்சீர் கொண்டதான, ஓம். யாக சமர்ப்பணங்களில் நான் மௌனமாய் ஜெபிப்பதான மந்திர உச்சாடனை. அசைவற்றவைகளில் நான் இமயம்.
உட்பொருள்:
உள்ளுணர்வுக் கனலில் பொலிவுள்ள ஆன்மாக்களில் பேருணர்வுதான் ரகசியங்களை உள்ளிருந்து வெளிப்படுத்துகின்றது. பேருணர்வுதான் ஆக்க விசையான ஓம் ஒலியில் ஒலிக்கிறது. தியானம் செய்பவரின் அறிநிலை வெளி மௌனத்தில் தானாக ஒலிக்கும் ஓம் ஸ்வரமும் அந்தப் பேருணர்வுதான். அதுதான் எல்லாவற்றிலும் மேலானதும் நிரந்தரமானதும்.
10.26. விருக்ஷங்களில் நான் புனிதமான அஷ்வத்த மரம். தெய்வ முனிவர்களில் நான் நாரதன். விண்ணகக் கானங்கள் பாடித்திரிவோரான கந்தர்வர்களில் நான் பிரகாசமான தேருடையவனான சித்ரரதன். பூரணசித்தமுடையோரில் நான் கபிலமுனி.
உட்பொருள்:
வாழ்வுத் தொடரையே [விதை-மரம்-விதை என சங்கிலித்தொடராய் வளரும்] அழியா விருக்ஷமாய் பேருணர்வு வெளிப்படுத்திக் கொள்கிறது. அதுதான் பிரபஞ்ச வெளிப்பாடு மற்றும் முழுமைக்கு மீள்வதான ஆன்மாவின் மீட்சி. அதுதான் தியானம் செய்வோரின் யோகக்கண்களில் ஒளிரும் பிரகாசம். அதுதான் படைப்பு வகையறாக்களின் அறிவுப் பலப்பாடு.
10.27. குதிரைகளில் நான் அம்ருதத்துடன் உதித்த உச்சைஸ்ரவஸ் என அறி. யானைகளுள் நான் ஐராவதம். மனிதர்களில் நான்தான் மன்னன்.
உட்பொருள்:
பேருணர்வுதான் வாழ்விப்பதான பிராணனை உருவாக்கி அந்த பிராண சக்தியை திசைதிருப்பி சாதகனின் சுஷும்னா நாடிக்கு மேலேற்றுகிறது. நான்தான் ஞானத் திறவுகோல். நானே சாதகனின் புலன்களையும் அவனுடைய உணர்வுப் படித்தரங்களையும் ஆள்பவன்.
10.28. ஆயுதங்களில் மின்னலுடன்கூடிய இடி (வஜ்ராயுதம்) நானே. பசுக்களில் நான் காமதேனு. உற்பத்தி செய்பவர்களில் நான் காமதேவன். ஸர்ப்பங்களில் நான்தான் நாகராஜனான வாசுகி.
உட்பொருள்:
பேருணர்வுதான் மூல இயற்கையை ஜனிப்பதான ஓம் ஸ்வரத்தின் ஒலி மற்றும் ஒளி. ஆன்ம விழிப்புணர்வை மீட்பதான அருட்கொடையான கருணை நானே. ஆன்மாக்கள் வியக்தகதமாகவும், ஜீவராசிகள் உயிர்ப்பெருக்கம் செய்தலுக்கும் ஆன கவர்ச்சி விசை நானே. பிரபஞ்சத்தை வியாபித்திருப்பதும், ஆன்ம விழிப்பற்ற மக்களிடம் மறைவிலிருப்பதும், ஆன்ம விழிப்புள்ள சாதகர்களிடம் செயல்துடிப்பு கொண்டதுமான குண்டலினி நானே.
10.29. நாகங்களில் நான் அனந்தன். நீர்நிலைகளில் நான் வருணன். மூதாதையர்களில் நான் அர்யமான். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுபவர்களில் நான் யமன்.
உட்பொருள்:
பேருணர்வுதான் மூலஇயற்கையின் பரப்பாக வெளிப்பட்டு ஜட இயற்கை வழி ஆன்மாக்கள் தற்காலிக மயக்கத்தினை உணரச் செய்கின்றன. ஜீவாத்மாக்கள் உறையும் சம்சார சாகரமும் நானே. தான் நிலையற்றவொன்றெனும் மயக்கத்திலிருந்து எழுப்பி தான் நிலையானவன் எனும் சுவானுபூதி நல்கும் ஆன்மாவின் சுவாதீனம் நானே.
10.30. அசுரர்களில் நான் பிரகலாதன். கணக்கிடுபவைகளில் நான் காலம். வனவிலங்குகளில் நான் சிங்கம். பறவைகளில் நான் கருடன்.
உட்பொருள்:
சுயஞானத்திற்குத் தடையான எல்லா அம்சங்களையும் வெல்லுவதான பூரிப்புடனான உற்சாக உணர்வு நானே. பிரபஞ்சச் சுழற்சிக் காலக் கணக்கீடுகளில் நான்தான் காலம். பலவாறாக இருக்கும் விசைகளில் நான்தான் உன்னதமான சர்வசக்தன். சாதகனின் மயக்கங்களையும் காட்சிப் பிழைகளையும் போக்கும் அவனுடைய விழிப்புணர்வை விரிப்பவனும் நானே.
10.31. சுத்தீகரிப்பவைகளில் நான் காற்று. போர்வீரர்களில் நான் ராமன். கடல் வாழ் உயிரினங்களில் நான் மீன். நதிகளில் நான் கங்கை.
உட்பொருள்:
சுத்தீகரிக்கும் விசைகளில் பேருணர்வுதான் வாழவைக்கும் பிராணசக்தி. ஒழுங்கின்மையைக் கண்டிக்கும் தர்மம் பேருணர்வுதான். சாதகர்களின் விழிப்புப் பரப்பில் ஏற்படும் தடைகளை நீக்கும் சமாதி உள்காட்சி பேருணர்வுதான். ஆன்மதிறவாதல் தானாய் நடக்கும்போது சுய வெளிப்பாடாய் நிகழும் மீட்புஞானம் பேருணர்வுதான்.
10.32. படைப்புக்களின் ஆதி, நடு, அந்தம் நானே. எல்லா ஞானங்களில் நான் உன்னத ஆன்மஞானம். வாதிடுபவர்களில் நான் தர்க்க அறிவு.
உட்பொருள்:
சர்வவியாபகப் பேருணர்வு தன்னில் கடந்த, தற்கால, வருங்காலத்தைக் கொண்டுள்ளது. பேருணர்வுதான் தன்மயமாக உணரும் ஆன்ம மெய்யறிவு. அதனை நுண்ணறிவால் ஆராய்பவர்களிடம் அந்த அறிவும் பேருணர்வுதான்.
10.33. எழுத்துக்களில் நான் முதலெழுத்தாகிய “அ”. வாக்கியங்களில் நான் அவைகளைக் கோர்க்கும் பிணை. நானே சனாதன காலம். நான்தான் சர்வக்ஞானி. நான்தான் படைப்புக்களை ஒழுங்குபடுத்துபவன்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வுதான் வெளிப்படு இயற்கையின் வரவிருக்கும் தோன்றல்களுக்கு ஆதியான முதல் அம்சம். வெளிப்படு நிகழ்வுகளின் இடைப்படு இணைப்பு வஸ்து பேருணர்வுதான். பிரபஞ்சவெளியில் தோன்றும் தேச-காலத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் முதலற்ற முடிவற்ற காலமே பேருணர்வு. இயற்கைப் பரப்பில் சர்வத்தையும் அறியும் அறிவும், சகலத்தையும் நியமிக்கின்ற விசையும் பேருணர்வுதான்.
10.34. அனைத்தையும் அழிக்கும் மரணம் நானே, வருவனவற்றின் மூலமும் நானே. மனித இயல்புகளில் நான்தான் அவனுடைய புகழ், செல்வம், வாக்கு, நினைவு, ஞானம், உறுதிப்பாடு மற்றும் பொறுமை.
உட்பொருள்:
பிரபஞ்சத்தை பேருணர்வு அழித்து ஆக்குகிறது. பேருணர்வுதான் இயல்பு குணங்களில் ஆன்மவெளிப்பாட்டினை சாத்தியப்படுத்துவது, அதுதான் நலவாழ்வை ஆதரிக்கும் விசை, அதுதான் ஒலி அதிர்வலை, நிகழ்வுகளின் செய்திகளைத் தாங்கும் விழிப்புப் பரப்பில் நினைவுப்பதிவுகள் அதுதான். தீர்க்க அறிவும், உண்மையுணர்வதான உறுதிப்பாடும், அனைத்து சூழல்களிலும் ஆன்ம அமைதி அனுபவிப்பதான சாதகனின் பொறுமையும் அதுதான்.
10.35. மந்திரங்களில் நான் ப்ருஹத்ஸாமன். செய்யுட்பாக்களில் நான் காயத்ரி. மாதங்களில் நான் மார்கழி. காலங்களில் நான் வசந்தம்.
உட்பொருள்:
புனித ஸ்வரங்களில் உன்னதப் பேருணர்வுதான் சுதந்திர உணர்வு தரும் விசை. நம்பிக்கையுடன் உச்சரிக்கப்படும் மந்திரங்களில் பேருணர்வுதான் மனதிற்கு வெளிச்சம் தரும் ஞானம். தியான காலங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பேருணர்வுதான் உடனடியாகத் தொடர்பு கொள்வதற்கு ஏற்ப விளங்குவது. முழுமைக்கு மீட்புப் பெறும் காலநேரங்களில் உன்னதப் பேருணர்வின் இருப்புண்மைதான் உடனடி ஒளியூட்டத்தை நல்குவது.
10.36. நான் வஞ்சகர்களின் சூதாட்டம். சக்தியுள்ளவர்களின் சக்தி நான். நான் வெற்றி, முயற்சி, நல்லவைகளின் நல்லது நான்தான்.
உட்பொருள்:
பேருணர்வு தான் உருவாக்கிய ஜட இயற்கையால் தன்னை மறைத்துக் கொண்டு, மயக்குறு ஆன்மாக்களின் உணர்வு முதிர்ச்சிக்கேற்ப அவைகள் நடந்து கொள்ளவும் அனுபவம் பெறவும் அனுமதிக்கிறது. பேருணர்வின் வெளிப்படு அம்சங்கள்தான் தடைகளை வெல்வதான வெற்றி, உறுதியான முயற்சி மற்றும் தூய சத்வகுணங்கள்.
10.37. வ்ருஷ்ணிகுலத்தோரில் நான் வாசுதேவன். பாண்டுபுத்ரர்களில் நான் அர்ஜுனன். முனிவர்களில் நான் வியாசர். கவிஞர்களில் தான் உஷானன்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வின் பலவாய் இருக்கும் அம்சங்களில், சர்வ வியாபகமான பேருணர்வின் செல்வாக்குடைய சக்தி ஒன்றுதான். ஷட்சக்கரங்களில் பேருணர்வுதான் கடுமையான சுய கட்டுப்பாடு மற்றும் இறைஞானத்திற்கான பேரார்வம். உன்னதப் பேருணர்வின் சுயவெளிப்பாட்டு அம்சங்களில் ஞானமும்-கல்வியும், எழுச்சியுடைய பக்திக் கனலும் அதுதான்.
10.38. ஒழுங்குபடுத்துபவர்களிடம் நான்தான் செங்கோல். வெற்றியை விரும்புபவர்களிடம் நான்தான் அதற்கான மார்கதர்சி. ரகசிய விஷயங்களில் நானே மௌனம். ஞானிகளிடம் ஞானம் நானே.
உட்பொருள்:
காரணகாரிய விதிதான் கடமைகளையும் செயல்களையும் ஆற்றுமளவுக்கு முதிர்வு பெறாத ஆன்மாக்களுக்கு ஒழுக்கத்தை விதித்து அதன் நடத்தைகளை சீர் செய்கிறது. விவேக ஞானம் திறவாவதற்குரிய ரகசிய இடம் கர்மவாசனைகளும் மனத் தத்தளிப்புகளும் தணிந்த நிசப்தமான உணர்வுநிலையே.
10.39. அனைத்து படைப்புக்களின் வித்து நானே. என்னை அன்றி இயங்கும் இயங்காத எந்த வஸ்துக்களும் இல்லை.
உட்பொருள்:
பேருணர்விலிருந்துதான் எல்லா ஆன்மாக்களும் இயற்கைப் படைப்புக்களும் வெளித்தோன்றி இருத்தலாகின்றன. பேருணர்வின்றி வெளிப்பாட்டில் எதுவும் அப்பேருணர்வினை மூலமாகவும் உள் ஆழ்ந்த சாரமாகவும் கொண்டிராமல் இருக்கமுடியாது.
10.40. என் தெய்வீக வெளிப்பாடுகள் எல்லையற்றவை. அந்த விரிவின் ஒரு பகுதியையே நான் உனக்கு விவரித்துள்ளேன்.
உட்பொருள்:
உன்னதப் பேருணர்வின் சுய வெளிப்பாடு எண்ணிலடங்காததும் மேலும் அதன் இயக்கம் இடையறாமல் தொடர்வதும் ஆகும். ஆத்மா தனது அனுபவத்தில் கொள்ளும் இந்த வெளிப்படு அம்சமோ அண்டவெளியின் ஒரு கீற்றுப் பார்வைதான்.
10.41. வெளிப்படுத்தப்பட்டவைகளில் அன்பையும் உயிர்மையையும் தங்களுக்குள் பிரகாசமாய்ப் பொதித்து வைத்துள்ள எல்லாம் என் சக்தியின் ஒரு பங்குபாகத்திலிருந்து தோன்றியதே என நீ புரிந்துகொள்வாயாக.
உட்பொருள்:
வெளிப்படுத்தப்பட்டவைகளில் வாழ்வுக்கு ஊட்டம் தரும் சக்திகளைத் தன்னகத்தே வைத்திருக்கின்ற எல்லாம் பேருணர்வின் ஒளிவெள்ளத்தின் ஒரு சிறுபாகம்தான் என அறி.
10.42. இந்த விரிவான ஞானத்தினால் உனக்கு என்ன பயன்? என்னுடைய ஒரு பங்கு பாகத்தால் இந்தப் பிரபஞ்சத்தில் பரவி அதனைத் தாங்குகிறேன்.
உட்பொருள்:
ஆனால் ஏன் இவ்விவரங்களை நீ அறிய நினைக்கிறாய்? உன்னதப் பேருணர்வுதான் அதன் ஒரு பகுதியால் இப்பிரபஞ்சத்தில் பரவி அதனைக் காக்கிறது.
உரை:
பேருணர்வு தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறது எனும் விரிவில் ஒரு கிரணத்தை அறிவதானது நாம் இப்பூமியிலும் புலனாகா மண்டலங்களிலும் திறம்பட வாழ உதவும். வெளிப்பாடு அடைந்து எல்லாவற்றையும் மேலூடுருவி இருக்கும் உன்னதப் பேருணர்வின் பூரணத்தை அறிய ஆன்மா செய்யும் தியானத்தில் ஒன்றில் ஒன்று சார்ந்திருக்கும் இந்த தோற்றப் பொருட்கள் பற்றிய ஞானம் அவசியப்படாது.
முழுமை அறிவியலான யோக கிரந்தமான, கிருஷ்ணார்ஜுன உரையாடலான, கீதோபநிஷத்தில், விபூதி யோகம் என மூலத்திலும், திவ்யத்தின் வெளிப்பாடு யோகம் என இவ்வுரையிலும் தலைப்பிடப்பட்ட 10 ம் அத்தியாயம் நிறைவுபெறுகிறது.
Post a Comment