W87. தியானத்தினில் உதிக்கும் புனித ஆனந்தத்தைக் கடவுளாய்ப் பாவித்துச் செய்யும் துதி. (Whispers from Eternity - Tamil & English)
87. தியானத்தினில் உதிக்கும் புனித ஆனந்தத்தைக் கடவுளாய்ப் பாவித்துச் செய்யும் துதி.
இறைத்தந்தையே, ஆனந்தத்தினில் இருந்து நான் தோன்றியுள்ளேன்; ஆனந்தத்திற்காக நான் வாழ்கின்றேன்; அந்த ஆனந்தத்தில் நீ என்னை உருக்கி விடு! நீ புனிதமான இடையறாத ஆனந்தம்; நீ தான் நான் விரும்பித் தேடும் அந்த ஆனந்தம்; நீ என்றும் நிலைத்திருக்கும் ஆன்ம ஆனந்தம். வழிதவறிய புலனின்பங்களினால் அன்றி, தியானத்தினிலும், நற்செயல்களிலும் உதிக்கும் ஆனந்தத்தினால் மட்டுமே உன்னைத் துதிக்க எனக்குக் கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
87 Worship of God as sacred Joy found in meditation.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org