W217. சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது. (Whispers from Eternity - Tamil & English)
217. சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது.
தியானத்தின் கதவுகள் வழியாக, சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது. அது வெளியே பறந்து சென்று, தனது இறக்கைகளை எல்லையற்ற ஆகாசத்தில் விரித்தது. துன்பத்தால்-வாட்டப்பட்ட எல்லா உயிர்களின் மீதும் அதன் ஆனந்த இறக்கைகளின் சாந்த நிழலை வீசியது.
பின், அந்த சொர்க்கலோகப் பறவை திரும்ப தனது சிறு கூண்டெனும் பழைய பழக்கங்களின் எண்ணங்களை நினைவுகூர்ந்தது; உடனே, அது தனது இறக்கைகளை மடக்கிக் கொண்டு, லோகாயதத் தன்மைகொண்ட அந்த இரும்புக்கம்பிகளுக்குப் பின்னே சென்று முடங்கியது.
நிரந்தரத்தின் பறவையே, சித்திரவதைப்படுத்தும் கனவுகளாலான உன் சிறு கூண்டை உடைத்துத் தள்ளிவிட்டு, எல்லாவற்றிலும் குடிகொண்டுள்ள உன் சர்வவியாபகக் கூட்டிற்குப் பற.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
217 The imprisoned Bird of Omnipresence was released.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org