Holy Kural - 099
99. சான்றாண்மை - Sublimity
1. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. All goodness is duty to them Who are dutiful and sublime. V# 981 2. குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. Good in the great is character Than that there is nothing better. V# 982 3. அன்புநாண் ஓப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். Love, truth, regard, modesty, grace These five are virtue's resting place. V# 983 4. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. Not to kill is penance pure Not to slander virtue sure. V# 984 5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. Humility is valour's strength A force that averts foes at length. V# 985 6. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். To bear repulse e'en from the mean Is the touch-stone of worthy men. V# 986 7. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. Of perfection what is the gain If it returns not joy for pain? V# 987 8. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின். No shame there is in poverty To one strong in good quality. V# 988 9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். Aeons may change but not the seer Who is a sea of virtue pure. V# 989 10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை. The world will not more bear its weight If from high virtue fall the great. V# 990
Send Your Comments to phdsiva@mccrf.org