W109. விழிப்புற்றுத் தயாரான நிலையில் வைக்க உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
109. விழிப்புற்றுத் தயாரான நிலையில் வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என்னை விழிப்புறச் செய்தால், அப்புறம் மறுபடியும் எப்படித்தான் நான் உறங்கமுடியும்? ஒருக்கால் உறக்கம் என்னை மயக்கி ஆட்கொண்டு விட்டால் , நீ மறுபடியும் என்னை விழிப்புறுத்துவாயா? வாழ்க்கையெனும் கனவுலோகத்தின் பயங்கரங்கள் இப்போது மறைந்துவிட்டன. என் சோகத்தை நீ ஆனந்தக்கண்ணீராய் மாற்றிவிட்டாய். என் இன்பங்கள் ஆனந்தமாக ஒளிர்கின்றன. என் தேக-கோயில் உன் ஒளியினால் நிரம்பியுள்ளது. உன் ஒளியின் கிரணங்கள் என் ஞானக்கண்கள் சொக்கி மயங்குவதிலிருந்து காக்கின்றன. என்னை எப்போதும் விழிப்புற்றுத் தயாராக வைத்துக்கொண்டிருப்பதற்காக, என் தந்தையே, நான் உனக்கு மனமார நன்றி செலுத்துகின்றேன்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
109 Demand to be kept awake and ready.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org