Holy Kural - 032
32. இன்னா செய்யாமை - Non-violence
1. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் The pure by faith mean pain to none Though princely wealth by that is won. V# 311 2. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage. V# 312 3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat. V# 313 4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm. V# 314 5. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. What does a man from wisdom gain If he pines not at other's pain? V# 315 6. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். What you feel as 'pain' to yourself Do it not to the other-self V# 316 7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. Any, anywhere injure not At any time even in thought. V# 317 8. தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். How can he injure other souls Who in his life injury feels. V# 318 9. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். Harm others in the forenoon Harm seeks thee in afternoon. V# 319 10. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். No harm is done by peace-lovers For pains rebound on pain-givers. V# 320
Send Your Comments to phdsiva@mccrf.org