W188. என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன. (Whispers from Eternity - Tamil & English)
188. என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.
உன் வருகையால் என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன. கடவுளே, நீ வந்தபோது எல்லாமே ஜீவகளையுடன் பிரகாசித்தன. கோயிலில் நான் நின்றிருந்த இடத்தில் பளிங்குத்தளம், உன் சாந்நித்தியதால் எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. உன் தொடுகையால் ஜடப்பொருட்கள் உணர்வுப் புனருத்தாரணம் பெற்று, எல்லாப்புறங்களிலுமிருந்து அவை பேசின. உன் ஆனந்த நறுமணத்தைச் சுமந்து, நிஸ்சலமெனும் சுகந்தமான காற்று எல்லாப்பக்கங்களிலும் தவழ்ந்து பரவியது.
உடைந்துபோன அமைதிப்பாறைகளின் அடியில் மறைந்திருக்கும் உன் சரணாலயத்தைக் கண்டுகொண்டேன்.
புனிதமெனும் தூய பலிபீடத்தின் மேல் உன் ஆனந்தப் பேரூற்று துள்ளிக் குதிக்கின்றது.
ஏந்திய என் உள்ளங்கைகளில், உன் ஆறுதலெனும் உயிரூற்று நீரை வாங்கி அருந்துகின்றேன். இனி எனக்கு தாகமென்பதே கிடையாது என்பதை நான் அறிகின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
188 Many doors opened before me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org