Holy Kural - 017
17. அழுக்காறாமை - Avoid envy
1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இல்லாத இயல்பு Deem your heart as virtuous When your nature is not jealous. V# 161 2. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் No excellence excels the one That by nature envies none. V# 162 3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான் Who envies others' good fortune Can't prosper in virtue of his own. V# 163 4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து The wise through envy don't others wrong Knowing that woes from evils throng. V# 164 5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது Man shall be wrecked by envy's whim Even if enemies spare him. V# 165 6. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin. V# 166 7. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். Fortune deserts the envious Leaving misfortune ominous. V# 167 8. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் Caitiff envy despoils wealth And drags one into evil path. V# 168 9. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் Why is envy rich, goodmen poor People with surprise think over. V# 169 10. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் The envious prosper never The envy-less prosper ever. V# 170
Send Your Comments to phdsiva@mccrf.org