Holy Kural - 076
76. பொருள் செயல்வகை - Way of making wealth
1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். Naught exists that can, save wealth Make the worthless as men of worth. V# 751 2. இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. The have-nothing poor all despise The men of wealth all raise and praise. V# 752 3. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. Waneless wealth is light that goes To every land and gloom removes. V# 753 4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். The blameless wealth from fairest means Brings good virtue and also bliss. V# 754 5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். Riches devoid of love and grace Off with it; it is disgrace! V# 755 6. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். Escheats, derelicts; spoils of war Taxes duties are king's treasure. V# 756 7. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு Grace the child of love is nourished By the wet-nurse of wealth cherished. V# 757 8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. Treasures in hand fulfil all things Like hill-tuskers the wars of kings. V# 758 9. செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல் Make wealth; there is no sharper steel The insolence of foes to quell. V# 759 10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு They have joy and virtue at hand Who acquire treasures abundant. V# 760
Send Your Comments to phdsiva@mccrf.org