W98. அழைப்பிற்கு பதிலளிக்கக்கோரி கடவுளை உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
98. அழைப்பிற்கு பதிலளிக்கக்கோரி கடவுளை உரிமையுடன் வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என் கோயிலுக்கு இன்று வருகை புரிந்துள்ளாய். உன் வருகையால், என் எல்லா சேவகப் புலன்களும் பிரகாசமாக விழிப்படைந்துள்ளன, என் இதயவாசல்கள் எல்லாமே திறந்துவிட்டன. உன் அருளால், யுகாந்தரமாகக் கவ்விய இருள் நீங்கியது. உன் வருகையின் அறிகுறி புலப்படும்போதே அவ்விருள் ஓடிமறைந்தது. ஆரவாரம் செய்யும் என் ஏக்கங்கள் நீ இருப்பதைக் கட்டியம் கூறுகின்றன. என் ஆன்மச்சிமிழிலிருந்து பக்திமணம் உன் சன்னதிபீடத்தை நோக்கி உயர்கின்றது. எனக்கு அருள்புரி! என் அழைப்பிற்குப் பதிலளி!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Edited by: V.R. Ganesh Chander
Original:
98 Demand that God respond.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org