W203. பொங்கும் நீலக்கடலில் நான் உன்னுடன் துள்ளிக்குதித்து விளையாடுவேன். (Whispers from Eternity - Tamil & English)
203. பொங்கும் நீலக்கடலில் நான் உன்னுடன் துள்ளிக்குதித்து விளையாடுவேன்.
பொங்கும் நீலக்கடலில், ஆனந்தத்தினால் என் ஆவி அமைதியான கடற்கரையில் துள்ளிக்குதிக்கின்றது. தாழ்வுநில துர்நாற்ற வாயுக்கள், தனிமையில் ஒதுங்கி நிமிர்ந்திருக்கும் வறண்ட குன்றுகளும் நீங்கின. உப்பு மணம் என் ரத்தவோட்டத்தில் கலந்து, என் ஆற்றல் கரைபுரண்டு ஓடுகின்றது. ஆஹா! கடற்காற்றினால் என்னே ஒரு ஜீவப் புத்துணர்வு அயராமல் என்னுள்ளே பாய்கின்றது! ஆஹா, நீலக்கடலோரச் சீரான கடற்கரையே, நீ ஆரோக்கியத்திற்கு பெயர்பெற்ற தேவலோகத்தை அடுத்த ஒரு சொர்க்கம். நீலக்கடலோரத்தின் அருகில் உன்னிடமிருந்து நான் ஆரோக்கியத்தைப் பருகுவேன். நீ ஆழமான நீலக்கடலை எப்படி வெளிரிய நீலவானுடன் பின்னிப் பிணைக்கின்றாயோ, அதுபோல மகத்தான உன் பேருணர்வை எங்கள் அரும்பும் நம்பிக்கையுடன் நெய்து, அதனை எல்லாத்திசைகளிலும் பரப்ப விழைகின்றாய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
203 In the bursts of blue brine I shall bound with Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org