Holy Kural - 069
69. தூது - The embassy
1. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. Love, noble birth, good courtesy Pleasing kings mark true embassy. V# 681 2. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. Envoys must bear love for their prince Knowledge and learned eloquence. V# 682 3. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. Savant among savants, he pleads Before lanced king, triumphant words. V# 683 4. அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. Who has these three: good form, sense, lore Can act as bold ambassador. V# 684 5. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. Not harsh, the envoy's winsome ways Does good by pleasant words concise. V# 685 6. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. Learned; fearless, the envoy tends Convincing words which time demands. V# 686 7. கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. Knowing duty time and place The envoy employs mature phrase. V# 687 8. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. The true envoy of three virtues Is pure helpful and bold in views. V# 688 9. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். The envoy who ports the king's message Has flawless words and heart's courage. V# 689 10. இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு உறுதி பயப்பதாம் தூது. Braving death the bold envoy Assures his king's safety and joy. V# 690
Send Your Comments to phdsiva@mccrf.org