Holy Kural - 065
65. சொல்வன்மை - Power of speech
1. நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. The goodness called goodness of speech Is goodness which nothing can reach. V# 641 2. ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. Since gain or ruin speeches bring Guard against the slips of tongue. V# 642 3. கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கோளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல். A speech is speech that holds ears And attracts ev'n those that are averse. V# 643 4. திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். Weigh thy words and speak; because No wealth or virtue words surpass. V# 644 5. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து Speak out thy world so that no word Can win it and say untoward. V# 645 6. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். Spotless men speak what is sweet And grasp in others what is meet. V# 646 7. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. No foe defies the speaker clear Flawless, puissant, and free from fear. V# 647 8. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். The world will quickly carry out The words of counsellors astute. V# 648 9. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். They overspeak who do not seek A few and flawless words to speak. V# 649 10. இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். Who can't express what they have learnt Are bunch of flowers not fragrant. V# 650
Send Your Comments to phdsiva@mccrf.org