Holy Kural - 079
79. நட்பு - Friendship
1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. Like friendship what's so hard to gain? That guards one against acts villain? V# 781 2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு - Friendship . Good friendship shines like waxing moon, The bad withers like waning moon. V# 782 3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. Like taste in books good friendship grows The more one moves the more he knows. V# 783 4. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு Not to laugh is friendship made But to hit when faults exceed. V# 784 5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். No close living nor clasping grip Friendship's feeling heart's fellowship. V# 785 6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. Friendship is not more smile on face It is the smiling heart's embrace. V# 786 7. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. From ruin friendship saves and shares The load of pain and right path shows. V# 787 8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதுஆம் நட்பு. Friendship hastens help in mishaps Like hands picking up dress that slips. V# 788 9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. Friendship is enthroned on the strength That always helps with utmost warmth. V# 789 10. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. 'Such we are and such they are' Ev'n this boast will friendship mar. V# 790
Send Your Comments to phdsiva@mccrf.org