Holy Kural - 088
88. பகைத்திறம் தெரிதல் - Appraising enemies
1. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. Let not one even as a sport The ill-natured enmity court. V# 871 2. வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. Incur the hate of bow-ploughers But not the hate of word-ploughers. V# 872 3. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். Forlorn, who rouses many foes The worst insanity betrays. V# 873 4. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. This world goes safely in his grace Whose heart makes friends even of foes. V# 874 5. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. Alone, if two foes you oppose Make one of them your ally close. V# 875 6. தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். Trust or distrust; during distress Keep aloof; don't mix with foes. V# 876 7. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து To those who know not, tell not your pain Nor your weakness to foes explain. V# 877 8. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. Know how and act and defend well The pride of enemies shall fall. V# 878 9. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து Cut off thorn-trees when young they are; Grown hard, they cut your hands beware. V# 879 10. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். To breathe on earth they are not fit Defying foes who don't defeat. V# 880
Send Your Comments to phdsiva@mccrf.org