Holy Kural - 118
118. கண்விதுப்பழிதல் - Wasteful look for wistful love
1. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம் கண்டது. The eye pointed him to me; why then They weep with malady and pine? V# 1171 2. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance? V# 1172 3. கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. Eyes darted eager glance that day It's funny that they weep today. V# 1173 4. பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. These eyes left me to endless grief Crying adry without relief. V# 1174 5. படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly. V# 1175 6. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves. V# 1176 7. உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். Let tears dry up pining pining In eyes that eyed him longing longing. V# 1177 8. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். Ther's he whose lips loved, not his heart Yet my eyes pine seeing him not. V# 1178 9. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். He comes; no sleep; he goes; no sleep This is the fate of eyes that weep. V# 1179 10. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து. Like drum beats eyes declare my heart; From people who could hide his secret? V# 1180
Send Your Comments to phdsiva@mccrf.org