W107. மாயத்திரையை விலக்க உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
107. மாயத்திரையை விலக்க உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, என்னைச்சுற்றிலும் ஆவரணத்திரைகள் உன்னை என்னிடமிருந்து மூடிமறைக்கின்றன. செவ்வந்திப்பூக்கள், ரோஜாப்பூக்கள், சுடரும் பொன்னிற மேகங்களாலான அழகிய திரைகளை நான் விரும்பி ரசிக்கின்றேன். விண்மீன்-அலங்கரித்த, கருமையான இரவுத்திரைக்குப் பின்னால் நீ எவ்வளவு காலந்தான் மறைந்திருப்பாய்? உன் திரைகளை நான் விரும்புகிறேன், ஏனெனில் அவை உன்னை மறைத்தபோதிலும், நீ உள்ளதையும் குறிப்பால் உணர்த்துகின்றது. ஆயினும், நான் எந்தவித வெளிப்புற திரைகளும் இன்றி - உன்னை உள்ளபடி பார்க்க விரும்புகின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
107 Demand for removal of the veil of illusion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org