W18. தியானக்கடலில் உன் ஞானமுத்துக்களைப் பெறுவதற்கு உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
18. தியானக்கடலில் உன் ஞானமுத்துக்களைப் பெறுவதற்கு உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, தியானமெனும் கடலில் ஆழ்ந்து மூழ்கி ஞான முத்துக்களைக் கொணர எனக்குக்கற்பி. ஆசாபாசங்களெனும் சுறாக்கள் வந்தெனை அழிக்காமலிருக்க மனசாட்சியெனும் நீர்மூழ்கியாடையை கவசமாகக் கொண்டு கடலின் அடித்தளத்திற்கு தலைக்குப்புற முழ்குவதற்கு எனக்குக்கற்பி. நான் ஓரிருமுறை முத்துகுளித்துவிட்டு ஞானமுத்துக்களைக் கண்டுகொள்ள முடியவில்லை எனில், தியானக்கடலிலே உன் ஞானமுத்துக்கள் இல்லையென குறைகூறாமலிருக்க எனக்குக்கற்பி. அதற்குப் பதிலாக, என் முத்துக்குளிப்பில் குறைகாண எனக்குக்கற்பி. உன் அழியா ஞான முத்துக்களையும், தெய்வீக ஆனந்தத்தையும் கண்டுகொள்ளும் வரை, தியானத்தில் மீண்டும் மீண்டும், ஒவ்வொரு முறையும் மென்மேலும் ஆழமாகச் செல்ல எனக்குக்கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
18 Demand for Pearls of Wisdom to be obtained in the sea of meditation.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org