Holy Kural - 094
94. சூது - Gambling
1. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. Avoid gambling, albeit you win Gulping bait-hook what does fish gain? V# 931 2. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. Can gamblers in life good obtain Who lose a hundred one to gain? V# 932 3. உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். If kings indulge in casting dice All their fortune will flow to foes. V# 933 4. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். Nothing will make you poor like game Which adds to woes and ruins fame. V# 934 5. கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். The game, game-hall and gambler's art Who sought with glee have come to nought. V# 935 6. அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்ட டார். Men swallowed by the ogress, dice Suffer grief and want by that vice. V# 936 7. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். If men their time in game-den spend Ancestral wealth and virtues end. V# 937 8. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. Game ruins wealth and spoils grace Leads to lies and wretched woes. V# 938 9. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். Dress, wealth, food, fame, learning-these five In gambler's hand will never thrive. V# 939 10. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். Love for game grows with every loss As love for life with sorrows grows. V# 940
Send Your Comments to phdsiva@mccrf.org