W190. ஆன்மீகச் செவிட்டுத்தனத்தை குணப்படுத்து; உன்னத குணங்களின் இன்னிசையைக் கேட்கச் செய். (Whispers from Eternity - Tamil & English)
190. ஆன்மீகச் செவிட்டுத்தனத்தை குணப்படுத்து; உன்னத குணங்களின் இன்னிசையைக் கேட்கச் செய்.
பார்வையற்ற மனிதன் ஒளியின் அழகையும், மகத்துவத்தையும் பார்த்து ரசிக்க முடியுமா? காதுகேளா மனிதன் தெய்வீகக் குரல்களால் இசைக்கும் பண்களைக் கேட்டு ரசிக்க முடியுமா?
எங்கள் தந்தையே! தற்காலிகப் புலனின்பங்களால் கண்மறைக்கப்பட்டவன், எப்படி சுயஒழுக்கச் சூரியனின்று தோன்றும் ஆரோக்கிய, அழகுக் கதிர்களைக் கண்டுகொள்ள முடியும்?
தந்தையே, ஒரு பெரும் செல்வந்தன் ஆனால் ஆன்மீகச் செவிடன் எப்படி புனித ஆன்மாவின் உன்னத குணங்கள் எழுப்பும் சாந்தி தரும் விண்ணுலக இன்னிசையைக் கேட்க முடியும்?
நற்குணங்களின் ஒளியால், அறவினை தீவினையைக் காட்டிலும் அதிகப் பொலிவும் இனிமையும் உடையதெனக் காணுமாறும், உன் வழிகாட்டும் குரலை மற்ற எல்லா சத்தங்களுக்கும் மேலாக கேட்குமாறும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
190 Cure Spiritual Deafness and make me listen to the chorus of Noble Qualities
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org