W6. பிரபஞ்சக் கோயிலில் செய்யும் பொது வழிபாடு. (Whispers from Eternity - Tamil & English)
6. பிரபஞ்சக் கோயிலில் செய்யும் பொது வழிபாடு.
ஜீவனுள்ள பல்வேறு எண்ணங்களாலான பக்தியினால், நான் உனக்கு விழிப்புணர்வுடன் கூடிய அமைதிக் கோயில் எழுப்பியுள்ளேன். நான் எல்லா நல்மதங்களில் உதித்த ஞானத்தினாலான பலவண்ண விளக்குகளை உனக்கு எடுத்து வந்துள்ளேன். அவை எல்லாமே உன் ஒரே மெய்ம்மையின் ஒளியினைப் பிரகாசிக்கின்றன.
உனக்காக ஏங்கும் மனித ஆசைகளின் ஒன்றுகலந்த வாசனை எங்கள் இதய ஜாடிகளிலிருந்து சுருள்சுருளாக மேலெழும்புகின்றது. உன் புனித சாந்நித்தியம் எல்லாவிடங்களிலுமுள்ள பீடங்களிலும் ஜொலிக்கின்றது.
கோயில்கள், கூடாரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என இவை அனைத்திலும் துலங்கும் எல்லா பிரார்த்தனைகளும் ஒரே உலகமொழியான ஆழமான அன்பினால் உன்னை எண்ணி ஜபிக்கின்றன. எங்கள் உணர்வுகளின் வாத்தியக்குழு, எல்லா ஆன்ம கீதங்களின் கூட்டு கானத்திற்கும், அனைவரின் ஆனந்தக்கண்ணீர் ததும்பலுக்கும், அனைத்து ஆனந்தகும்மியினில் பொங்கியெழும் கூக்குரலுக்கும், எல்லா பிரார்த்தனைகளின் மங்களவொலிக்கும் இயைவாக ஒத்திசைக்கின்றது.
எங்கள் உள்ளங்களின் சுவரற்றப் பிரபஞ்சக் கோயிலில், எங்களின் ஒரே தந்தையான உன்னை வழிபடுகின்றோம். எங்களுக்கு நீ எப்பொழுதும் இவ்வாறு தரிசனம் தர விருப்பம் கொள்வாயாக. ஆமென், ஓம், ஆமின்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
6 Universal prayer of the Cosmic Temple.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org