Holy Kural - 005
5. இல்வாழ்க்கை - Married Life
1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை The ideal householder is he Who aids the natural orders there. V# 41 2. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை His help the monk and retired share, And celebrate students are his care. V# 42 3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை By dutiful householder's aid God, manes, kin, self and guests are served. V# 43 4. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் Sin he shuns and food he shares His home is bright and brighter fares. V# 44 5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells. V# 45 6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன். Who turns from righteous family To be a monk, what profits he? V# 46 7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை Of all who strive for bliss, the great Is he who leads the married state. V# 47 8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து Straight in virtue, right in living Make men brighter than monks praying. V# 48 9. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim. V# 49 10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் He is a man of divine worth Who lives in ideal home on earth. V# 50
Send Your Comments to phdsiva@mccrf.org