W100. புனிதத் திரியேகத்திற்கு (Holy Trinity) உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
100. புனிதத் திரியேகத்திற்கு (Holy Trinity) உரிமையுடன் வேண்டுதல்.
பரலோகத் திரியேகமே (ஓம், தத், ஸத்), எல்லாவற்றையும் கடந்ததாய் இருக்கும் கடவுளே (ஸத்), பிரபஞ்சத்தில் கிறிஸ்துப்* பேருணர்வாக இருக்கும் கடவுளே (தத்), படைக்கவல்ல அதிர்வலை சக்தியாக இருக்கும் கடவுளே (ஓம்)! எனக்கு பேருண்மையை அறிய ஞானத்தை அருள்வாயாக! மேலும், என் சுயமுயற்சியுடனும், தர்மநெறி அறிவுடனும், நான் ஆன்மதரிசனம் எனும் அரிய ஏணிப்படிகளில் ஏற விரும்புகின்றேன் - முடிவில் அந்த ஒளிரும் சித்தி முகட்டை அடைந்து, இரண்டற்ற ஒன்றேயான அந்த தெய்வீகப் பேருணர்வினை நேரடியாக அனுபவிக்க!
---
கிறிஸ்துப் பேருணர்வு: இதனைக் "கூடஸ்த சைதன்யம்", "கிருஷ்ணப் பேருணர்வு" எனவும் கூறுவர். இது பிரபஞ்சம் முழுவதிலும் பரவி விரவியிருக்கும் ஒரே உணர்வு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Edited by: V.R. Ganesh Chander
Original:
100 Demand to the Holy Trinity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Post a Comment