Holy Kural - 018
18. வெஃகாமை - Against covetousness
1. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் Who covets others' honest wealth That greed ruins his house forthwith. V# 171 2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணுவர் பவர் Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin. V# 172 3. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் For spiritual bliss who long For fleeting joy commit no wrong. V# 173 4. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் The truth-knowers of sense-control Though in want covet not at all. V# 174 5. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் What is one's subtle wisdom worth If it deals ill with all on earth. V# 175 6. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் Who seeks for grace on righteous path Suffers by evil covetous wealth. V# 176 7. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன் Shun the fruit of covetousness All its yield is inglorious. V# 177 8. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். Against covetousness - The mark of lasting wealth is shown By not coveting others' own. V# 178 9. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. Fortune seeks the just and wise Who are free from coveting vice. V# 179 10. இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு Desireless, greatness conquers all; Coveting misers ruined fall. V# 180
Send Your Comments to phdsiva@mccrf.org