W67. என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது (Whispers from Eternity - Tamil & English)
67. என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது
என் வழிபாட்டு ஊர்தி உனை நோக்கி நகர்கிறது. தயை பொழியும் எல்லா மனிதர்களின் விழிகளிலும், உன் கருணையொளி சிந்துவதைக் காண்கிறேன். இருண்ட ஜீவித மரங்களில், உன் பிரகாசம் மின்மினிப்பூச்சியாய் அவ்வப்போது மின்னுகிறது.
மனக்கலக்கமெனும் கடூரமான புழுதிப்புயலினூடே சிக்கி என் வழிபாட்டு ஊர்தி மெதுவாய் முன்னோக்கி ஊர்கிறது. மிக்க சிரமத்திற்குப் பின், கடைசியாக உன் அமைதியான உறுதிமொழிப் பாலைவனச்சோலையின் அறிகுறி தென்படுகிறது. அது என் தளர்ந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது.
உன் ஆனந்தச்சுனையில் என் வறண்ட நம்பிக்கை உதடுகளை அமிழ்த்தி அதிலூறும் ஆரா அமுதை அகங்குளிரச் சுவைத்துப் பருகுவேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
67 The Caravan of my Prayers is moving toward Thee
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org